இயலாமை

புதிதாய் பூத்திருக்கும் பூவை
பாவை பறிக்கும் போதும்,
புல்லில் அமர்ந்திருக்கும்
பனித்துளியை
சூரியன் விழுங்கும் போதும்,
முதியோர் இல்லங்களில்
சேர்க்கப்படும் பெற்றோரைக்
காணும் போதும்,
குடியோடு குடித்தனம் செய்யும்
குடிமகன்களை பார்க்கும் போதும்,
அப்பாவி மக்களை வஞ்சித்து
தீவிரவாதம் தலைதூக்கும் போதும்,
நாட்டில் கோடி கோடியாய்
ஊழலுக்கு பணம் இருந்ததும்
குடிசைகள் மட்டும் வீடுகளாய்
மாற்றம் அடையாத போதும்
இனமறியா இயலாமையுடன்
முடிந்தே போகிறது வாழ்க்கை.!!

Leave a comment