
ஒவ்வொன்றின் மீது காதல் – அ(தை)
ஓராயிரம் முறை உணர்ந்தபோதிலும்,
எண்ணிலடாங்தவை ஏராளம்…
எனினும்,
வையமே காதல்…
வையத்தில் பிறந்தது காதல்…
வையத்தில் நிறைந்தது காதல்…
வையமே காதல்…
சிலிர்பூட்டும்
பூங்காற்றின் உணர்வு காதல்!
சிலையை
செதுக்கிய சிற்பியின் காதல்!
நட்சத்திரங்களுக்கு
நிலவின் மேல் காதல்!
புல்லில் படர்ந்திருக்கும்
பனித்துளியின் காதல்!
பறித்த போதும் சிரிக்கும் பூக்களின் காதல்!
விதைக்கு
விருட்சத்தின் மீது காதல்!
மங்கும் சூரியனில்
பொங்கும் மதியின் காதல்!
மழைக்கோ
பூமியை முத்தமிட காதல்!
கரைகளை கட்டியணைத்திட ஓயாமல் துரத்தும்
ஆர்பரிக்கும் அலைகடலின் காதல்!
காகிதப்பூ என அறியாமல்
தேனெடுக்க துடிக்கும் வண்டுவின் காதல்!
சூரியனைக் கண்டு சோம்பல் முறிக்கும்
சூரியகாந்தியின் காதல்!
உயிரற்றது எனினும் என் பேனாவிற்கு
உணர்வுள்ளது போலும்
என் எழுத்துக்களின் மீது காதல்!
வையமே காதல்…
வையத்தில் பிறந்தது காதல்…
வையத்தில் நிறைந்தது காதல்…
வையமே காதல்…
இப்படி.,
வையமே மொழிகளின்றி மௌனமாய்
காதல் காவியத்தில்
சுழல்கிறது…
ஆனால், நானோ…
வர்ணிக்க வரிகளற்று
காதல் கடலில்
தத்தளிக்கிறேன்…
வையத்தையே காதலித்ததால்…
இது தான், காதல் போதையா..??!!